Thursday, 24 October 2013

ஆரோக்கியமான வாழ்க்கையும் - ஊட்டச்சத்து கூடுதல் உணவுகளின் அவசியமும்

ஒருவருடைய உணவில் உள்ள குறைகளை நிரப்ப, ஊட்டச்சத்து கூடுதல் உணவுகளை எடுத்துக் கொள்வது எல்லா வயதினருக்கும் பாதுகாப்பானது மற்றும் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விதத்தில் நன்மை தரக்கூடியது.

  1. குழந்தைகள்: அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அவர்களுடைய வளர்ச்சிக்குத் தேவை. குழந்தைகள் நீண்ட நேரம் படிக்க வேண்டியிருப்பதால் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், வெளியில் அதிகம் விளையாடவும் ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் உதவுகின்றன. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் நோய்தடுப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன மற்றும் அவர்களுடைய ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன.
  2. இளைஞர்கள்: அதிக மன அழுத்தத்தை சமாளிக்க இவர்களுக்கு சக்தியும், வலிமையும் தேவை. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் உடல், மன மற்றும் உணர்ச்சி மாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ளும் போது எதிர்த்துப் போராட அவர்களுக்கு உதவுகிறது.
  3. உழைக்கும் வர்க்கத்தினர்: பிசியான வேலை மற்றும் குடும்ப கடமைகள், மன அழுத்தம் மற்றும் நேரடி போட்டி ஆகியன எந்நேரமும் அவர்களை ஓடிக்கொண்டே இருக்கச் செய்கின்றன. இயல்பான ஆரோக்கிய வாழ்வு வாழ உடலின் திறனை களைக்கச் செய்கின்றன. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், ஆரோக்கியமாக இருக்கவும் அவர்களுக்கு உதவுகிறது.
  4. நடுத்தர வயதுடையவர்கள்: வயதாகும் போது, அன்றாட செயல்பாடுகளைச் செய்வதில் உடலின் சக்தியளவும் குறையத் தொடங்குகிறது. ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் இதனுடன் சேர்ந்து கொள்ளும் போது, உடலுக்கு புத்துணர்வளிக்க தினமும் கூடுதல் உணவுகளை குறிப்பிடத்தகுந்த அளவில் எடுத்துக் கொள்வது இன்னும் அவசியமாகிறது. ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமங்களின் குறையை நிவர்த்தி செய்கின்றன.
  5. முதியவர்கள்: முதிர்ந்த வயதை ஒருவர் அடைந்ததும், உடலின் அமைப்பு முறைகள் குறிப்பாக செரிமான முறை மெத்தனமடைகிறது. அதோடு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் குறைகின்றன. அதனால் ஒருவர் எளிய வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. உடல் தனது வலிமையைத் திரும்பப் பெறவும், ஆரோக்கியமான வாழ்வை வாழவும், சுதந்திரத்தைத் தூண்டவும் ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் உதவுகின்றன.
  6. கருவுற்ற மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள்: கருவுற்ற மற்றும் தாய்ப்பாலுட்டும் பெண்களுக்கு, அவர்களுக்காகவும், அவர்களுடைய குழந்தைகளுக்காகவும் அளிக்க ஊட்டச்சத்துக்கள் கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் மிக அவசியம். ஏனெனில் உடலுக்கு கால்சியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவற்றிற்கான தேவை அதிகமாக இருக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையானவைகள்

மனித உடல் இயந்திரம் போல செயல்படுகிறது மற்றும் அதன் அன்றாட செயல்பாடுகளைச் செய்ய ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து தேவைப்படுகிறது. உடல் என்னும் இன்ஞ்சினக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், அது மெதுவாகவும், சக்தி குறைவாகவும் செயல்பட வேண்டியிருக்கும். இதனால் உடல் சரியற்ற விதத்தில் செயல்பட வழிவகுக்கும்.
  1. வாழ்க்கை முறையில் உள்ள குறைபாடுகள்: மனிதகுலத்திற்கு அளிக்கப்படும் பல்வேறு விதமான சொகுசான வாழ்க்கை வசதிகள் அதிகரித்து வருவதால், பலர் ஒழுங்குமுறையற்ற வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். இந்த வாழ்க்கை முறையின் காரணமாக, அவர்கள் தங்களது ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர். இதனால் தாங்கள் நன்றாக உண்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டாலும், ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டிருக்கின்றனர். தவறான எல்லாவற்றையும் சாப்பிடும்போது அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை தவற விட்டு விடுகின்றனர்.
  2. தேர்ந்தெடுக்கும் உணவுகள்: மனிதனின் நாக்கு, உடலுக்கு எது நல்லது என்பதை விட எது ருசியானது என்பதை விரும்புகிறது. எனவே, அது ஊட்டச்சத்து கொண்டிராவிட்டாலும், நாம் ருசியானவற்றையே சாப்பிடுகிறோம். இது சமநிலையற்ற ஊட்டச்சத்து நிலைக்கு வழிவகுக்கிறது.
  3. பழங்கள் மற்றும் காய்கறிகளைக் குறைவாக சாப்பிடுதல்: பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு மிகவும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமங்களோடு, பைபரும் அளிக்கின்றன. அவை சரியான ஜீரணத்திற்கு உதவுகின்றன மற்றம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வளர்க்க சிறந்தவையாக திகழ்கின்றன. ஆனால் மக்கள் இந்த நன்மைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உடலுக்குத் தேவையான குறைந்த அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை கூட சாப்பிடுவதில்லை.
  4. பிசியான வேலை: மக்கள் மேலும் மேலும் தங்கள் வேலையில் பிசியாக இருப்பதாலும், சுறுசுறுப்பான அட்டவணையை பின்பற்ற வேண்டியிருப்பதாலும், அவர்களுடைய ஆரோக்கியம் கெடுகிறது. அவர்கள் கிடைப்பதையெல்லலாம், இயன்றபோதெல்லாம் சாப்பிடுகின்றனர். இதனால் உடலில் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு அதிக அளவில் ஏற்படுகிறது.
  5. மேம்போக்கான உணவுகளை உண்தல்: தங்களுடைய உடல் எடையைக் குறைக்கும் என்று கருதி பலர் டயட்டுகளைக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. சரியான உணவை உண்தல் மற்றும் உடற்பயிற்சிக்கு இடையில் சமநிலையைக் கொண்டிருக்க ஒருவர் முயற்சி செய்தல் வேண்டும்.

செல்லுலார் ஊட்டமளிக்கும் சிகிச்சை என்றால் என்ன?

மனித உடல் 100 டிரில்லியனுக்கும் (ஒரு கோடி x கோடி) அதிகமான செல்களால் ஆனது மற்றும் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து அல்லது ஊட்டம் தேவைப்படுகிறது. இதனால் நாம் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். ஊட்டச்சத்துக் குறைவு உடலில் பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். இது போன்ற குறைபாடுகளைத் தடுக்க செல்லுலார் ஊட்டமளிக்கும் சிகிச்சையின் நன்மைகளைப் பரப்புவதில் வெஸ்டீஜ் நம்பிக்கை கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்த அணுகுமுறை, இதில் எல்லா அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமங்கள், ஃபைபர், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் அடங்கியுள்ளன. இந்த பொருட்கள் சரியான அளவு ஊட்டச்சத்தை உடலுக்கு அளிக்கின்றன மற்றும் ஊட்டச்சத்து குறைவை நிவர்த்தி செய்கின்றன.

Tuesday, 22 October 2013

வெஸ்டீஜ் உலகம் உங்களை வரவேற்கிறது

வெஸ்டீஜ் மார்கெட்டிங் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் புது தில்லியை தனது தலைமையகமாகக் கொண்டு 2004 ல் அதன் செயல்பாட்டை தொடங்கியது. உலகத் தரம் வாய்ந்த ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களை கையாளும், ஒரு முன்னணி நேரடி விற்பனை நிறுவனமாகும். வெஸ்டீஜ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் என்ற விகித்ததில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியே அதன் தாயாரிப்புகளின் தரம், வியாபார திட்டம் மற்றும் அதன் நிறுவன மேலாண்மையை நமக்கு தெளிவாக காட்டுகிறது. அதுவே இந்த சீரான மற்றும் தொடர்ந்த வளர்ச்சியை சாதித்ததற்கு வெகுமதி எனலாம்.

வெஸ்டீஜ் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 புதிய தயாரிப்புகளை அறிமுகபடுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜி.எம்.பி அரசு சான்றிதழ் பெற்ற சொந்த தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த அதன் பொருட்களின் வாயிலாக சர்வதேச அளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்யும் விதத்தில் ஐ.எஸ்.ஓ. 9001-2008 சான்றிதழ் பெற்று நம்பிக்கை வழங்கி வருகிறது. மேலும் 40க்கும் மேற்பட்ட நிறுவன கிளை அலுவலகங்களையும், 2 சர்வதேச அலுவலகங்களையும் மற்றும் 1800க்கும் மேற்பட்ட சேவை மையங்களையும் கொண்டு 10,00,000 விநியோகஸ்த்தர்களோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன் எண்ணிக்கை மாதமாதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

வெஸ்டீஜ் தனது உறுப்பினர்களை அவரவர்களின் விருப்பமான வழியில் முன்னேற நம்பிக்கையான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆரோக்கியத்தின் மூலம் செல்வம் (WELLTH) என்ற பொன்மொழியை உலக அளவில் பரப்பி, அதன் தயாரிப்புகளின் நம்பிக்கையும் - நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ள உறுப்பினர்களையும் தொடர்ந்து வளப்படுத்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளது.

நோக்கம்
மக்கள் தாங்கள் விரும்பிய தரமான, வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, பொருளாதார சுதந்திரம் அடைய உதவுவது.

இலக்கு
2018-ம் ஆண்டில் உலக அளவில் நேரடி விற்பனை துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைவது.

வெஸ்டீஜ் மதிப்புகள்
தொடர்ந்த வளர்ச்சி, நேர்மை, தன்னாட்சி, உறுதியான உணர்வுகள், உறுதியான நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களோடு ஒத்துபோதல் மற்றும் அவர்களை மையப்படுத்துதல். மேலும் உங்கள் விருப்பத்தை விடாமுயற்சி மற்றும் நேர்மையான அணுகுமுறையாலும் பூர்த்தி செய்தல்.