Thursday, 24 October 2013

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையானவைகள்

மனித உடல் இயந்திரம் போல செயல்படுகிறது மற்றும் அதன் அன்றாட செயல்பாடுகளைச் செய்ய ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து தேவைப்படுகிறது. உடல் என்னும் இன்ஞ்சினக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், அது மெதுவாகவும், சக்தி குறைவாகவும் செயல்பட வேண்டியிருக்கும். இதனால் உடல் சரியற்ற விதத்தில் செயல்பட வழிவகுக்கும்.
  1. வாழ்க்கை முறையில் உள்ள குறைபாடுகள்: மனிதகுலத்திற்கு அளிக்கப்படும் பல்வேறு விதமான சொகுசான வாழ்க்கை வசதிகள் அதிகரித்து வருவதால், பலர் ஒழுங்குமுறையற்ற வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். இந்த வாழ்க்கை முறையின் காரணமாக, அவர்கள் தங்களது ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர். இதனால் தாங்கள் நன்றாக உண்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டாலும், ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டிருக்கின்றனர். தவறான எல்லாவற்றையும் சாப்பிடும்போது அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை தவற விட்டு விடுகின்றனர்.
  2. தேர்ந்தெடுக்கும் உணவுகள்: மனிதனின் நாக்கு, உடலுக்கு எது நல்லது என்பதை விட எது ருசியானது என்பதை விரும்புகிறது. எனவே, அது ஊட்டச்சத்து கொண்டிராவிட்டாலும், நாம் ருசியானவற்றையே சாப்பிடுகிறோம். இது சமநிலையற்ற ஊட்டச்சத்து நிலைக்கு வழிவகுக்கிறது.
  3. பழங்கள் மற்றும் காய்கறிகளைக் குறைவாக சாப்பிடுதல்: பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு மிகவும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமங்களோடு, பைபரும் அளிக்கின்றன. அவை சரியான ஜீரணத்திற்கு உதவுகின்றன மற்றம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வளர்க்க சிறந்தவையாக திகழ்கின்றன. ஆனால் மக்கள் இந்த நன்மைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உடலுக்குத் தேவையான குறைந்த அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை கூட சாப்பிடுவதில்லை.
  4. பிசியான வேலை: மக்கள் மேலும் மேலும் தங்கள் வேலையில் பிசியாக இருப்பதாலும், சுறுசுறுப்பான அட்டவணையை பின்பற்ற வேண்டியிருப்பதாலும், அவர்களுடைய ஆரோக்கியம் கெடுகிறது. அவர்கள் கிடைப்பதையெல்லலாம், இயன்றபோதெல்லாம் சாப்பிடுகின்றனர். இதனால் உடலில் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு அதிக அளவில் ஏற்படுகிறது.
  5. மேம்போக்கான உணவுகளை உண்தல்: தங்களுடைய உடல் எடையைக் குறைக்கும் என்று கருதி பலர் டயட்டுகளைக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. சரியான உணவை உண்தல் மற்றும் உடற்பயிற்சிக்கு இடையில் சமநிலையைக் கொண்டிருக்க ஒருவர் முயற்சி செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment